×

நோய் தாக்கி யானை இறந்தால் உரிமையாளர் கைது : யானை வளர்ப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்


சென்னை : முறையான பராமரிப்பு இன்றி யானை இறந்தால் அதன் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையை வனத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி தஞ்சாவூரில் கடந்த வாரம் இறந்த குலாபி யானையின் உரிமையாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டு உள்ளார். யானைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறையினர், பாஸ்கருக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளனர்.

அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் திருச்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 58 வயதான ககுலாபி யானை பொள்ளாச்சியில் இருந்து காரைக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டு மீண்டும் தஞ்சாவூர் அழைத்து சென்றதால் அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நீர் சத்து குறைவு காரணமாக யானை இருந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துருப்பதாக திருச்சி மாவட்ட வனஅதிகாரி சுஜாதா தெரிவித்தார்.

50 வயதான வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அனுமதி கடிதம் வைத்திருப்பதும் அவசியம். யானைகளை எக்காரணம் கொண்டும் பிச்சை எடுக்க வைக்கக் கூடாது என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர். இதை மீறினால் யானைகளை பறிமுதல் செய்வதோடு பாகன்கள் மற்றும்  உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் வனத்துறை உயர்அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : owner , Owner, arrested, elephant, gulabi, rules, breeding
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...