×

பூனம் தில்லான், சன்னி தியோல், அக்‌ஷய் கன்னா பெயர்கள் பரிசீலனை பஞ்சாப்பின் 3 தொகுதியில் பாஜ வேட்பாளராகும் நட்சத்திரங்கள்

பஞ்சாப்பில் 13 மக்களவை தொகுதிகளுக்கு மே 19ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, தேர்தலில் வெற்றி பெற முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாஜவும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. எப்படியாவது பஞ்சாப்பில் வெற்றி பெற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பாஜ போட்டியிடும் 3 மக்களவை தொகுதிகளில் பாலிவுட் பிரபலங்களை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. நடிகை பூனம் தில்லான், நடிகர் சன்னி தியோல், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோரை நிறுத்தவதற்கான வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.

நடிகை பூனம் தில்லான் பஞ்சாபிக்காரர். சண்டிகரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த  பூனம் தில்லான், பின்னர் மும்பை சென்றுவிட்டார். தற்போது மும்பையில்  வசிக்கும் பூனம் தில்லான், மகாராஷ்டிரா மாநில பாஜ துணை தலைவராக  உள்ளார். இதனால் பூனம் தில்லானை அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட மாநில பாஜ மேலிடத்துக்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் கடைசியாக நடந்த கூட்டத்தில் அவரது பெயர் விவாதிக்கப்படவில்லை. இதேபோல் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் அக்‌ஷய் கன்னாவின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poonam Dilan ,Sunny Deol ,Akshay Khanna , Poonam Dilan, Sunny Deol, Akshay Khanna
× RELATED சன்னி தியோலுக்கு வாய்ப்பு மறுப்பு;...