×

சென்னையில் கலர் பொடிகள் தூவி மக்கள் ஹோலி கொண்டாட்டம்

சென்னை: சென்னையில் பொதுமக்கள் கலர் பொடிகள் தூவி ஹோலி பண்டிகை மகிழ்ச்சியுடன் ெகாண்டாடினர்.  நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கும் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பிராட்வே, கீழ்ப்பாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கடையே நாடாளுமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் துணை ராணுவப்படையினர் கடந்த ஒரு வாரமாக கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுணா சிங் தலைமையில் ேநற்று மாலை எழும்பூர் பகுதியில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பு முடிந்த உடன், அப்பகுதியில் வசிக்கும் வடமாநில மக்களுடன் துணை ராணுவப்படையினர் இணைந்து கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி ஹோலி பண்டிகை கொண்டாடினர். அப்போது சாலையில் சென்ற அனைவரும் துணை ராணுவத்தினர் கொண்டாட்டத்தை வியப்புடன் பார்த்து ெசன்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : celebration ,Chennai , Chennai, Color Powders, Holi Celebration
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்