×

சம்ஜவுதா குண்டுவெடிப்பில் 68 பேரை கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியாது

புதுடெல்லி: சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் 68 பேரை கொன்றது யார் என்பது `யாருக்கும் தெரியாது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கிண்டலடித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2007 டிசம்பரில் அரியானா மாநிலம் பானிபட் அருகே சென்று கொண்டிருந்தபோது, 2 பெட்டிகளில் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேசிய புலானய்வு அமைப்பு நபா குமார் சர்கார் என்ற சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது. ஆனால் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் தேசிய புலனாய்வு குழுவினர் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, அசீமானந்தா உள்ளிட்ட 4 பேரை விடுவித்தது.

மீதமுள்ள நால்வரில் ஒருவர் டிசம்பர் 2007ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 பேர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ``2007ம் ஆண்டு நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில், 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையாகி உள்ளனர். அப்படி என்றால், இந்த குண்டுவெடிப்பில் 68 பேரை கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியாது. இது குற்றவியல் நீதித்துறை பெருமைப்படும் நாள்’’ என்று கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nobody ,blast ,Samjhauta , Killed 68 people, Samjhauta blast
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...