ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை...... வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.72 ஆக விற்பனையாகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.72 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.91 காசுகளாகவும் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹74.91