×

திமுக முன்னாள் எம்.பி. கா.ரா.சுப்பையன் மறைவு

கோவை:  கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் கா.ரா.சுப்பையன் (82). இவர் கடந்த 2000-2002ம் ஆண்டில் மேலவை எம்.பி.யாக இருந்தார். தற்பொழுது தி.மு.க. தீர்மான குழு செயலாளராக இருந்து வந்தார். இவர், உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் காலமானார். இதையடுத்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டது. திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, ராசா, முன்னாள் எம்.பி.க்கள் விடுதலை விரும்பி, மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சுப்பையனுக்கு மலர்க்கொடி என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,DMK ex-MP ,K.Papaiyan , DMK,ex-MP,death,K.subbaiyan
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...