×

பி.எஸ்.என்.எல் அதிகாரிகள்,ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் பணிகள் முடங்கும் அபாயம்

சென்னை: 4ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு இன்று முதல் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி  நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குகின்றனர். வரும் 20ம் தேதி வரையில் இந்த போராட்டம் தொடர்கிறது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், பல்வேறு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் கூறுகையில்: பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதை எதிர்த்து 18ம் தேதி முதல் 3 நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம். எனவே, திட்டமிட்டபடி இன்று முதல் 20ம் தேதி வரையில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். நாடு முழுவதிலும் ஒன்றே முக்கால் லட்சம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். சென்னையில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் இறங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை உறுவாகும். எனவே, அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BSNL ,strike , BSNL,officials,employees,threatened,strike,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...