×

காயமடைந்த பெண் நக்சலுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் ரத்த தானம்

ஜாம்ஷெட்பூர்:  ஜார்கண்டில் நடந்த நக்சல் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பெண் நக்சலுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் ரத்த தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 24 நக்சல்கள் தங்களது தாக்குதல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக குவிந்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனர். அந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது நக்சல்கள் கும்பல் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்த நிலையில் நக்சல் கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காலில் குண்டுபாய்ந்த காயமடைந்த நிலையில் பெண் நக்சல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெண் நக்சல் உடலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அப்போது  உதவி சப்-இன்ஸ்பெக்டர் பன்கஞ் சர்மா, தலைமை காவலர் பிசித்ரா குமார்  மற்றும் காவலர் பிர்பகதூர் யாதவ் ஆகியோர் ரத்த தானம் செய்தனர். இதன் பெண் நக்சலின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Naxal ,CRPF , Naxal, CRPF, donate blood
× RELATED சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை