×

பாதுகாப்பு விஷயத்தில் பா.ஜ அரசு சமரசம் ஆகாது: அமித்ஷா பேச்சு

லகிம்பூர்: ‘‘நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பா.ஜ அரசு சமரசம் செய்து கொள்ளாது’’ என அசாமில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ தலைவர் அமித்ஷா பேசினார். அசாம் மாநிலம் லகிம்பூரில் பா.ஜ இளைஞர் அணி சார்பில் நேற்று நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், பா.ஜ தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: காஷ்மீர் புல்வாமாவில் கோழைத்தனமான தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் எக்காரணத்தை கொண்டும் தப்பிக்க முடியாது. இதில் 40 வீரர்கள் செய்த உயிர்த் தியாகம் வீண் போகாது. ஏனென்றால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லை, பா.ஜ அரசு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பா.ஜ அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில், பிரதமர் மோடி உறுதியுடன் உள்ளார். பாகிஸ்தானுக்கு ஏற்கனவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலமாகவும், தூதரக மூலமாகவும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தை இன்னொரு காஷ்மீராக உருவாக அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் தேசிய குடிமக்கள் பதிவை கொண்டு வந்தோம். அதன் மூலம் ஊடுருவல்காரர்களை நாம் வெளியேற்றுவோம். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும்தான் என தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதில் நாட்டில் அனைத்து பகுதிகளில் உள்ள அகதிகளுக்கும் பொருந்தும். குடியுரிமை மசோதா கொண்டு வரப்படவில்லை என்றால், அசாம் மக்கள் பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டி வரும். குடியுரிமை மசோதாவை எதிர்த்து அசாம் கன பரிஷத் சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது. அசாம் மக்கள் அமைதியுடனும், வளர்ச்சியுடனும், பிரதமர் மோடியுடனும், முதல்வர் சர்பானந்தா சோனேவாலுடனும் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Amit Shah , BJP, Amit Shah
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்