×

பிளவுப்படுத்த முடியாது: ராகுல் ஆவேசம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புல்வாடமா தாக்குதல்  கொடூரமான சோகச் சம்பவம். நமது வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் முற்றிலும் வெறுக்கத்தக்கது. தீவிரவாதத்தின் நோக்கமே நாட்டை பிளவுபடுத்துவதுதான். எவ்வளவு கடின முயற்சிகள் எடுத்தாலும், ஒரு வினாடி கூட நாங்கள் பிளவுபட போவதில்லை. இந்த சம்பவத்தை நாடு மறக்காது என்பதை தாக்குதல் நடத்தியவர்கள் அறிய வேண்டும். இது இரங்கல் தெரிவிக்கும் நேரம். உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நேரம். இந்த விஷயத்தில் நமது ராணுவம், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு அளிக்கிறோம்’’ என்றார். இந்த பேட்டியின் போது மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்ேதாணி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் கூறுகையில், ‘`நாம் ஒருபோதும் தீவிரவாதத்துடன் சமாதானம் செய்துகொள்ளக் கூடாது. ஒரே நாடு என்ற நிலையை அடைய இணைந்து பணியோற்றுவோம்’’ என்றார்.

இலங்கை பிரதமர் கண்டனம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.  பிரதமர் நரேந்திர மோடிக்கும், தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இலங்கை முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சே தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த உலகம் தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடும்’ என்று கூறியுள்ளார்.

அரசியல் நிகழ்ச்சிகள் ரத்து

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேற்று ரத்து செய்தார். அதேபோல், பாஜ தலைவர் அமித் ஷா உட்பட அனைவரும் நேற்று பங்கேற்க இருந்த அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும்  ரத்து செய்தனர். மபி.யில் பிரதமர் மோடியும், ஒடிசா மற்றும் சட்டீஸ்கரில் அமித் ஷா பங்கேற்க இருந்த பிரசார கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

பாக். உளவுத்துறைக்கு தொடர்பு

அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் புரூஷ் ரெய்டல் அளித்துள்ள பேட்டியில், `காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தாக்குலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு முக்கிய பங்கு இருப்பதாக சந்தேகிக்கிறோம். இந்த தாக்குதலில் மூளையாக ஐஎஸ்ஐ அமைப்பு செயல்பட்டிருக்கலாம். இது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பெரிய சவாலாக இருக்கும்’’ என்றார்.  இதேபோல் முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியாக இருந்த அனிஷ் கோயல் கூறுகையில், `‘ காஷ்மீர் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பொறுப்பேற்று இருப்பது, காஷ்மீரில் பாகிஸ்தான் சார்ந்த தீவிரவாத குழுக்கள் தீவிரமாக செயல்படுகிறது என்பதையே உணர்த்துகிறது’’ என்றார்.

இந்தியாவுக்கு ஆதரவு தர சீனா இப்போதும் மறுப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ள அதேநேரம், இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று முரண்டு பிடித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், `‘இந்த தாக்குதலால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. தீவிரவாத செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை கண்டிக்கிறோம். அதே நேரம், ஜெய்ஷ் இ முகமது தலைவரான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா.வில் அறிவிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இந்த அமைப்புக்கு விதித்துள்ள தடைக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறோம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul , Can not be split, Rahul's obsession
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...