ஆண்டிபட்டி: வறட்சியிலும் ஆண்டிபட்டி பகுதியில் கிணற்று பாசனத்தில் விளைந்து அறுவடைக்காக நெற்கதிர்கள் காத்து நிற்கின்றன. ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்நகரைச் சுற்றியுள்ள ராஜக்காள்பட்டி, புள்ளிமான்கோம்பை, கரட்டுபட்டி, சீரங்கபுரம், அனைக்கரைபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த 8 வருடங்களாக போதிய மழைப் பொழிவு இல்லாததால், நீர் நிலைகள் வறண்டதால், கால்வாய் பாசனம், கிணற்று பாசனம் முற்றிலும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு பருவமழை மற்றும் ஓகி புயலால் மழை பெய்தும் சில நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதன் காரணத்தினால் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற வேண்டி பல லட்சங்கள் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலமாக கிணற்று பாசனம் செய்து நெல் பயிர்களை காப்பாற்றி வருகிறன்றனர். இந்நிலையில் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்காக காத்து நிற்கின்றன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
