×

வனப்பகுதிகளில் கடும் வறட்சி எதிரொலி : உணவிற்காக ஏங்கும் குரங்குகள், வாகனங்களை எதிர்பார்த்து காத்திருப்பு

அரூர்:  அரூர் வனப்பகுதியில், கடும் வறட்சி நிலவுவதால், சாலையோரங்களில் உணவிற்காக குரங்குகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், எங்கும் வறட்சி தாண்டவமாடுகிறது. மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைந்து வருகின்றனர். இதற்கு குரங்குகளும் தப்பவில்லை. வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக உணவு ஏதும் கிடைக்காத குரங்குகள் சாலையோரம் வந்து காத்திருக்கிறது.

அந்த வழியாக செல்லும் பயணிகள் உணவு ஏதேனும் போடுவார்களாக என பரிதாபத்துடன் உட்கார்ந்திருப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் குரங்குகள் பயணிகள் வீசும் உணவை கைப்பற்ற விரைந்து வரும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் நிலை உள்ளது. எனவே, வனப்பகுதிகளில் உள்ள குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drought ,forest , Drought, monkeys, food
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...