×

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் காரணமாக ேபாலீஸ் துறையை வேறு அமைச்சருக்கு மாற்ற வேண்டும்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் புகார் எழுந்துள்ள நிலையில் முதல்வரிடம் இருந்து காவல் துறையை வேறு அமைச்சருக்கு மாற்ற வேண்டும் என்று  திருநாவுக்கரசர் கூறினார்.  அகில இந்திய மாணவர் காங்கிரஸ் சார்பில் மாணவர் பிரச்னைகளை முன்னிறுத்தி அதை செயல்படுத்தும் வகையிலான ‘சிறப்பான இந்தியா’ என்ற இயக்கத்தை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதன் தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.விழாவுக்கு, தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் அஸ்வத்தாமன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்து, இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், அகில இந்திய மாணவர் காங்கிரஸ் செயலாளர்கள் அபின் வர்க்கி, சமசீரஷாரி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி, முன்னாள் எம்பி ராணி, கஜநாதன், சிரஞ்சீவி, சுமதி அன்பரசு, வடசென்னை ரஞ்சித், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சியிலுள்ள ஒவ்வொரு அணிக்கும் தேர்தல் பொறுப்புகளை கொடுத்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களை நம்பி இருக்கிறது. அவர்களுக்கான குறைந்தபட்ச செயல் திட்டங்களுடன் கூடிய சிறப்பான இந்தியா என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும். காவல் துறையை ேவறு அமைச்சருக்கு மாற்ற வேண்டும். சிபிஐ அல்லது விசாரணை குழு அல்லது நீதிபதி தலைமையில் விசாரணை குழு போட வேண்டும்.

இந்த கொலை, கொள்ளையில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் முதல்வரோ, துணை முதல்வரோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு குடும்பத்தினரோ இவர்களுக்கெல்லாம் அதில் பங்கு இருந்ததா? அல்லது கூட்டு கொள்ளையா கூட்டு முயற்சியா, தனியாக நடந்துள்ளதா என்பதை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.  சக்தி திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேரை இணைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக காங்கிரசார் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். வட்டார அளவில் சக்தி திட்டத்தில் யாரையும் இணைக்காத வட்டார தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Kodanadu ,department ,minister , Kodanad murder, robbery, minister
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...