×

2019ம் ஆண்டின் ஐ.பி.எல் போட்டிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. டி.என்.பி.எல். கிரிக்கெட் அணியில் மதுரைக்காக விளையாடி வருபவர் வருண் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தியின் அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

வருண் சக்கரவர்த்தி பேட்டி: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் என்னை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அஸ்வின் அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் அவரிடம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். ஆரம்பகாலங்களில் பகுதி நேரங்களில் நான் கிரிக்கெட் விளையாடி வந்தேன். பின்பு arkitekture ல் ஆர்வம் காட்டி படித்து வந்தேன், எனது 25 வயதில் வேலையை விட்டு கிரிக்கெட்டில் ஈடுபட முடிவெடுத்தேன். தற்போது நான் கிரிக்கெட்டில் இணைந்து 2 வருடம் ஆகிறது.

நான் கல்லூரி படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முடித்தேன். எங்களது அப்பாவுக்கு சொந்த ஊர் சேலம், அம்மாவுக்கு தேவக்கோட்டை. டி.என்.பி.எல். லில் இந்த வருடம் தான் பங்கேற்றேன். எனக்கு வாய்ப்பு அளித்த அனைவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்  அணில் கும்ளே. அடுத்த இலக்காக தமிழ்நாடு டி.20யில் நன்றாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

பெங்களூரு அணி
* மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிம்ரான் ஹெட்மயரை பெங்களூரு அணி ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
* இந்திய இளம் வீரர் சிவம் துபேவை ரூ.5  கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி
* இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மாவை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மும்பை அணி
* இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை ரூ.2 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.

பஞ்சாப் அணி
* கிரிக்கெட் வீரர் மொய்சஸ் ஹென்ரிக்யூஸை ரூ.1 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்ததுள்ளது.
* மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
* இங்கிலாந்து வீரர் சாம் குரானை ரூ.7.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
* இந்திய அணி வீரர் முகமது சமியை ரூ.4.80 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

கொல்கத்தா அணி
* மேற்குஇந்திய தீவுகள் வீரர் கார்லஸ் பிராத்வெயிடை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.

டெல்லி அணி
* இந்திய வீரர் அக்‌ஷர் படேலை ரூ.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.
* தென்னாப்பிர்க்கா வீரர் காலின் இங்ரமை ரூ.6.4 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

ஹைதராபாத் அணி
* கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹாவை சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணி
* இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை ரூ.8.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2019 ஏலம் : ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்கள் விவரம்
இந்நிலையில், விக்கெட் கீப்பராக ஏலத்தில் விடப்பட்ட வீரர் நமன் ஒஜ்ஹா, பென் மெக்டெர்மாட், இந்திய வீரர் யுவராஜ் சிங், கிறிஸ் ஜோர்டன், ஆல் ரவுண்டராக ஏலத்தில் விடப்பட்ட இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், நியூசிலாந்து வீரர் ப்ரெண்டான் மெக்கெல், மார்ட்டின் குப்டில் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,Punjab ,tournament ,Varanasi ,IPL , IPL tournament, Tamil Nadu veteran Varun Chakraborty, Punjab team
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...