×

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி

சிவகங்கை: கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை நதிக்கரை நாகரிகத்தை கண்டறியக்கூடிய முயற்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், நான்காம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள நிதியில்லை என்ற காரணத்தால் மத்திய தொல்லியல் துறை முன்வரவில்லை.

இதனையடுத்து, 47 கோடி ரூபாய் செலவில் 4ம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கால்நடைகள் மற்றும் மனிதர்களுடையதாக இருக்கலாம் என்று கூறியுள்ள அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மூன்று கட்ட ஆய்வில் வர்த்தகம் வாழ்வியல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்தது. மேலும், இங்கு அகழாய்வு செய்யப்பட்ட பொருட்கள், மாநில அரசின் நிதி உதவியோடு கீழடியிலேயே கள அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மனிதன் வாழ்ந்தது தொடர்பான ஆதாரத்திற்காக நான்காம் கட்ட ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் பலனாக ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களும், எலும்புகளும் கிடைத்திருப்பதால், கீழடியில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே, அடுத்தக்கட்ட அகழாய்வை நடத்த தமிழக தொல்லியல் துறை அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில், 5ம் கட்ட அகழாய்வை நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதையும், தமிழக தொல்லியல் துறை நடத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Archaeological Department ,Tamil Nadu ,phase , Keezhadi, excavation, Tamil Nadu Archaeological Department,Central Government
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய...