×

சட்டீஸ்கர் மாநில முதல்வராக பதவியேற்றார் பூபேஷ் பாகல்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் பதவியேற்றார். சட்டீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 99 தொகுதிகளில் காங்கிரஸ் 68 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல்வருக்கான போட்டியில் மூத்த தலைவர் டியோ சிங், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல் ஆகியோர் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக முதல்வர் பதவியேற்பு விழா அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பெய்ட்டி புயல் காரணமாக பெய்து வரும் மழையால் முதல்வர் பதவியேற்கும் இடம் புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள் விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து அம்மாநிலத்தின் மூன்றாவது முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல்வராகவும் பூபேஷ் பாகேல் பதவியேற்றார். புபேஷ் பாகெலுக்கு சத்திஸ்கர் ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhupesh Bhagal ,Chief Minister ,Chhattisgarh , Chhattisgarh, Bhupesh Bhagal, Congress, Rahul Gandhi
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!