×

துபாயில் இந்தியாவை சேர்ந்த கிடார் இசைக்கலைஞர் சடலமாக மீட்பு

துபாய்:  இந்தியாவை சேர்ந்த பிரபல கிடார் இசைக்கலைஞர் ஹிமான்சு சர்மா (22). துபாயில் உள்ள கார்கோவ்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். துபாயில் உள்ள மணிபால் உயர்கல்வி நிறுவனத்தின் கட்டிடவியல் துறை 5ம் ஆண்டு மாணவரான இவரை சக நண்பர்கள் சாக்கி என அன்பாக அழைத்து வந்தனர். இவர் பல்வேறு உள்ளூர் இசைகுழுக்களில் கிடார் இசைக்கலைஞராக பணியாற்றி பிரபலமடைந்தவர். இந்த நிலையில், தான் தங்கியிருந்த கார்கோவ்டு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் தடவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Guitarist ,India ,Dubai , Dubai, India, guitarist, body
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...