×

இரண்டாவது முறையாக பொதுமக்களை அலைய வைக்க கூடாது பதிவு ஆவணங்களை அன்றே திருப்பி கொடுக்கும் திட்டம்: டிசம்பர் 17ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் ஆன்லைன் பத்திர பதிவு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டில் இருந்த படியே இணையதளம்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களை கொண்டு வந்து பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு, பதிவு செய்யப்படும் ஆவணங்களை  உடனடியாக திருப்பி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பத்திரத்தை பெறுவதற்காக மற்றொரு நாட்கள் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த நிலையில் பத்திரம் பதிவுக்காக வரும் பொதுமக்களிடம் அன்றைய நாளிலேயே பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தர வேண்டும் என்று  பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் புதிய திட்டத்தை செயல்படுத்துகிறார்.

இது குறித்து டேட்டா ஆபரேட்டர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். பத்திரம் பதிவு செய்ய வரும்  பொதுமக்களிடம் அன்றைய தினத்திலேயே விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். வரும் பிப்ரவரி 17ம் தேதி முதல் பதிவுக்கு வரும் ஆவணங்களை அன்றைய தினத்திலேயே திருப்பி கொடுக்க வேண்டும் என்று அதில்  கூறப்பட்டுள்ளது.இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவை முடித்து அன்றைய தினத்திலேயே ஆவணத்தை திருப்பி கொடுக்கும் வகையில், ேதவைக்கேற்ப 735 டேட்டா  ஆபரேட்டர்கள் வரை நியமிக்கப்படுகின்றனர். தற்போது பொதுமக்கள் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் நிலையில் ஸ்கேனர் கருவி இயங்குகிறதா என்று பார்க்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி  அறிவுறுத்தியுள்ளார். இல்லையெனில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public , public, second time, Schedule , registration, documents
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...