×

40 ஆண்டுகளுக்கு முன்பே வரி நிர்வாகத்தில் கணினிமயத்தை கோட்டை விட்ட மத்திய அரசு: புத்தகத்தில் தகவல்

புதுடெல்லி : பான் எண் மூலம் கணினி மயமாக்கப்பட்ட வரி நிர்வாக முறையை 40 ஆண்டுகளுக்கு மன்பு மத்திய அரசு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அப்போதைய நிதியமைச்சர் சரண்சிங் இதை நிராகரித்து விட்டார் என  டாடா குழுமம் பற்றி எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாக ஆய்வாளர் ஷஷாங்க் ஷா என்பவர் டாடா குழுமத்தின் 150 ஆண்டு விழா மற்றும் ஜெஆர்டி டாடாவின் பிறந்தநாளை முன்னிட்டு புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த 1969ம் ஆண்டு மத்திய அரசு வங்கிகளை தேசிய மயம் ஆக்கியது. அதன்பிறகு 1977ம் ஆண்டில் பான் எண் சார்ந்த கணினி மூலமான வரி நிர்வாக நடைமுறையை உருவாக்கிய டிசிஎஸ் நிறுவனம், இதுகுறித்து  அப்போதைய மத்திய அமைச்சர் சரண் சிங்கிடம் முன்வைத்தது.

 ஆனால் கணினி மயம் ஆக்குவதை அவர் விரும்பவில்லை. நிதியமைச்சகத்தில் கணினி எதுவும் தேவையில்லை. கணினி மயமான நிர்வாகம் கொண்டுவந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற காரணத்தை காட்டி இந்த  திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.  அதன்பிறகு உலக நாடுகள் பல முழுமையான கணினி மய வரி நிர்வாகத்தை கொண்டு வந்திருந்தன. அப்போது மட்டும் இதனை மத்திய அரசு ஏற்று நடைமுறைப்படுத்தி இருந்தால், கணினி மயமான சிறந்த வரி நிர்வாக முறைக்கு இந்தியா மேற்கண்ட பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என  குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government , tax ,40 years, Central Government,computer system
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...