×

மாடுகள் வரத்து குறைந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் மாட்டு சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை மாடு வரத்து ஓரளவு இருந்தது. அப்போது வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமானது. கடந்த வாரம் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக, நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்து இல்லாமல் போனது. கர்நாடக மற்றும் அந்திர மாநில பகுதியிலிருந்தும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சுமார் 1500 மாடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று நடந்த சந்தைக்கு 800க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. மாடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தாலும், கோவை மற்றும் திருப்பூர், ஈரோடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூடுதல் விலைக்கு மாடுகளை வாங்கி சென்றனர். இதில், கடந்த வாரம் ரூ.33 ஆயிரத்துக்கு விற்பனையான காளை மாடு நேற்று ரூ.36 ஆயிரத்துக்கும், ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையான எருமை மாடு ரூ.35 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.35ஆயிரம் முதல் ரூ.37ஆயிரம் வரை என கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cows, Pollachi, sales
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...