×

ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் குழப்பமா? இதோ சிம்பிள் டிப்ஸ்

* பயண டிக்கட் ரத்து செய்யும் ேபாது, ரத்து செய்த தேதி, பயண தேதிக்கு எவ்வளவு நாளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது,  பட்டியல் தயாரான பின்,  அல்லது, ரயில் கிளம்பிய பின் ரத்து செய்யப்பட்டதா என்பதெல்லாம் உள்ளடக்கி தான் மீத கட்டணம் திரும்ப வரும்.
* உங்களது கன்பர்ம் ஆன்லைன் டிக்கட்டா? பயணிகள் பட்டியல் தயாரானதும் ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப வராது.
* ஆன்லைனில் முன்பதிவு டிக்கட் பதிவு செய்த போது எந்த கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு மூலம் கட்டணம் செலுத்தினீர்களோ, அதில் ரீபண்ட் பணம் திரும்ப அனுப்பப்படும்.
* ரயில் கிளம்ப 48 மணி நேரத்துக்கு முன் ரத்து செய்தால், முதல் வகுப்புக்கு 240, இரண்டாம் வகுப்புக்கு 200, மூன்றாம் வகுப்புக்கு 180 ரூபாய், சாதா ஸ்லீப்பருக்கு 120, சாதா 2ம் வகுப்புக்கு 60 பிடிக்கப்படும்.
* ரயில் கிளம்ப 12 முதல் 48 மணி நேரத்துக்குள் ரத்து செய்யப்பட்டால் கட்டணத்தில் 25 சதவீதம் பிடிக்கப்படும்.
* ரயில் கிளம்ப 4 மணியில் இருந்து 12 மணிக்குள் ரத்து ெசய்யப்பட்டால், 50 சதவீதம் கட்டணம் பிடிக்கப்படும்.
* ரயில் கிளம்பிய பின்னரோ, பயணிகள் பட்டியல் தயாரான பின்போ கட்டணத்தில் ரீபண்ட் எதுவும் வராது.
* வெயிட்டிங் லிஸ்ட், ஆர்ஏசி டிக்கட்  என்பதால் ரயிலில் பயணம் செய்யாமல் இருந்தால், விதிகளின் படி ஓரளவு கட்டணம் திரும்ப வரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cancel the train ticket, some simple tips
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...