×

பெண் கொலை, ஓசி பட்டாசு வாங்கிய விவகாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

பெரம்பூர்: ராயபுரத்தில் பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத ராயபுரம் இன்ஸ்பெக்டரும், லாரியை மடக்கி ஓசியில் பட்டாசு வாங்கிய ஏட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ராயபுரம், செட்டித்தோட்டம், குடிசை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (23). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வினோத் (25). இவரது மனைவி விஜயலட்சுமி (23). பிரேம்குமாரின் மகளை வினோத் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து, ராயபுரம் போலீசில் பிரேம்குமார் புகார் செய்துள்ளார்.

போலீசார் வினோத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து, எச்சரித்து அனுப்பி உள்ளனர். வீட்டிற்கு வந்த வினோத்குமார் பிரேம் குமார் மற்றும் உறவினர்களான பிராட்வேயை சேர்ந்த மேரி (40), மெர்லின் (33), சங்கர் (30) ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வினோத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, மேரியின் மார்பில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மெர்லின் கையில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் இருவரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார்.  

புகாரின்பேரில், ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், அவரது தம்பி தமிழ்செல்வன் (24), உறவினர் சங்கர் (27) மற்றும் வினோத்தின் மனைவி விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலை விவகாரத்தில், அலட்சி யமாக செயல்பட்ட ராயபுரம் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட்டை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். வேலைக்கு வேட்டு வைத்த பட்டாசு: கோயம்பேட்டில் கடந்த 18ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தீபாவளி பட்டாசு ஏற்றி வந்த சரக்கு லாரியை மடக்கி, டிரைவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 4 பட்டாசு பெட்டிகளை, கோயம்பேடு காவல் நிலைய ஏட்டு கலைவாணன் வாங்கியுள்ளார். எனவே, இவரையும் பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,police inspector , woman, murder,police inspector,suspect,fireworks
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...