×

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மிதந்த தேவாரம்

உத்தமபாளையம், : தேவாரம் வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாக கால்வாய்களுக்குள் வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேவாரத்தில் கடந்த 1979ம் ஆண்டு பெரிய அளவில் பேய்மழை பெய்துள்ளனது. இதனால் இங்குள்ள மிக முக்கியமான பிள்ளையார்த்து, பெரம்புவெட்டி ஓடையின் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன்பின்பு 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கொட்டி தீர்த்த பேய் மழையால் தேவாரம் சந்தைதெரு, மூணான்டிபட்டி, வடக்குதெருஉள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தின் உச்சத்தில் உள்ளனர்.

மறுபுறம் மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் அதிகமான மழை கொட்டியது. இங்குள்ள முக்கிய கண்மாய்களாக தேவாரம் பெரியதேவியம்மன், டி.ரெங்கநாதபுரம் சின்னதேவியம்மன், செட்டிகுளம், புதுக்குளம் போன்ற கண்மாய்கள் உள்ளன. மலையடிவாரத்தில் பெய்யக்கூடிய மழையை பெரம்புவெட்டி ஓடை, சாக்குலூத்துஓடை, வட்டஓடை, பிள்ளையார்த்து ஓடை, பதினெட்டாம்படி ஓடை, சுத்தகங்கை ஓடை, கன்னிமார்ஓடை உள்ளிட்ட 7 ஓடைகளின் வழியே தண்ணீர் வரும் இந்த ஓடைகள் பெரும்பாலும் 60 முதல் 120 அடி அகலம் வரை இருந்ததாக பொதுமக்கள் கூறினர். தற்போது இவை அனைத்தும் 10 முதல் 20 அடியே உள்ளன.

alignment=

இவை அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் கனமழை கொட்டினால் வெள்ளமாக மாறி ஊருக்குள் வரக்கூடிய நிலை உண்டாகி உள்ளது. எனவே, தேவாரம் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மஞ்சளாறு வடிநிலக்கோட்ட அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` தேவாரம் வெள்ளத்திற்கு காரணமே ஓடைகள் ஆக்கிரமிப்புதான். இதனாலேயே வெள்ளம் திசைமாறி ஊருக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் செல்கிறது. இவற்றை அகற்றிட தேவையான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஆபத்தான இடங்களை  கண்காணித்து வருகிறோம் உதவி ஆட்சியர் தகவல் :

தேவாரத்தில் கனமழையினால் வெள்ளம் பாதித்த இடங்களை உத்தமபாளையம் வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் வைத்திநாதன் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது ஊருக்குள் தண்ணீர்வராமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து அவர் கூறுகையில், தேவாரத்தில் நிரம்பி உள்ள 8 கண்மாய்களை கண்காணித்து வருகிறோம். இதில் ஏதேனும் உடைப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து துறை அதிகாரிகளும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் மிக பாதுகாப்பாக உள்ளனர்.

இருந்தாலும் மழை தொடர்வதால் இரவில் 24 மணிநேரமும் அதிகாரிகள் அலார்ட் செய்யப்பட்டுள்ளனர். மிக மேடான இடங்களில் பொக்லைன் மூலம் எடுத்து தண்ணீர் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். வருவாய் ஆய்வாளர்கள் முத்தமிழ், கம்பம் பரமசிவம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

போடி அருகே கண்மாய் கரை உடைந்ததால் மக்கள் பீதி

போடி அருகே சிலமலையிலுள்ள சூலப்புரம் மேற்கு பகுதியில் நேற்றுமுன்தினம் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் குதுவல் கண்மாய் நிரம்பி கரை நடைந்தது. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்தால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடைந்த கண்மாய் கரையை உடனடியாக சீரமைக்க போடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாரமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியினை டிஆர்ஓ கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devaram, heavy rain, people affected,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...