×

சபரிமலையில் தற்போதைய நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தருவோம் : தேவசம்போர்டு தலைவர் பேட்டி

கடந்த சில தினங்களுக்கு முன் பந்தளம் மன்னர் பிரதிநிதி, தந்திரி குடும்பத்தினர், ஐயப்ப சேவாசங்கம் மற்றும் சில அமைப்புகளுடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தியது. அப்போது தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக 19ம் தேதி (நேற்று) நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன்படி திருவனந்தபுரம் தேவசம்போர்டு ஆலோசனை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது சபரிமலையில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. இது பக்தர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க தேவசம்போர்டு உரிய நடவடிக்கை எடுக்கும். அது என்ன நடவடிக்கை என்பது விரைவில் தெரிவிக்கப்படும். தற்ேபாது சபரிமலையில் நிலவி வரும் சூழல் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. இந்த பொறுப்பு தேவசம்போர்டு வக்கீல் மனு அபிஷேக் சிங்வியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றத்திலும் சபரிமலையில் தற்போதுள்ள சூழல் குறித்து விளக்கம் அளிக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே 25 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் தேவசம்போர்டுக்கும் பங்கு உண்டு. இந்த சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வரும்போது உச்சநீதிமன்றம் தேவசம்போர்டிடம் விளக்கம் கேட்கும். அப்போது தேவசம்ேபார்டின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Sabarimala ,state , Let's report ,Supreme Court,current state ,Sabarimala:
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...