×

நீருக்கடியில் கேமரா, நிலத்தடியில் சென்சாருடன் அசாம் எல்லையில் ஸ்மார்ட் வேலி: அடுத்த மாதம் துவக்கம்

புதுடெல்லி: நீருக்கடியில் கேமரா, நிலத்தடியில் சென்சார் கருவிகள் என தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் வேலி திட்டம் அசாம் எல்லையில் அடுத்த மாதம் தொடங்கி வைக்கப்படுகிறது. வங்கதேசத்தை ஒட்டிய அசாம் எல்லையில் ஸ்மார்ட் வேலி திட்டத்தின் அடுத்த கட்டம் தொடங்கப்பட இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார்.  இதன்படி, அசாமின் துப்ரி மாவட்டத்தை ஒட்டிய நிலம் மற்றும் நீர் பகுதிகள் கொண்ட 60 கிமீ எல்லையில் தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், நீருக்கடியில் கேமரா, நிலத்தடியில் மின்னணு சென்சார் கருவிகள், சோனார் கேமரா, ஏரோஸ்டேட்ஸ், ரேடார் கோபுரங்கள் உள்ளிட்டவை இடம் பெறும்.

இதன் மூலம் 24 மணி நேரமும் தொய்வின்றி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். எந்த நேரத்திலும் நிலத்தின் வழியாகவோ, நீரின் வழியாகவோ ஊடுருவல் நடந்தால், தொழில்நுட்ப கருவிகள் வழியாக  உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வந்துவிடும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : border ,Smart Valley ,Assam , Underwater, Camera, Underground, Sensor, Assam Range, Smart Fence
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...