×

குமரியில் மர்ம காய்ச்சல் பலி 3 ஆனது: பழநியில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டு டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகிறது. குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு மருதவிளையை சேர்ந்த ஜஸ்டஸ் என்பவரின் மனைவி ெஜபசலின் ெஜனிஷா (29), நாகர்கோவில் மேலராமன்புதூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்த  பேச்சிப்பாறையை சேர்ந்த ஜெயதாஸ் மகள் அனிட்டா (16) ஆகியோர் கடந்த வாரம் மர்ம காய்ச்சலுக்கு  உயிரிழந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் தலக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(48) மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை, கோட்டார் வட்டவிளையை சேர்ந்த காய்கறி வியாபாரி இருவரும் பன்றி காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வில்வாதம்பட்டியை சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் மணிகண்டன் (46). பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு நேற்று  பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

விழுப்புரத்தில் 9 பேருக்கு டெங்கு:  விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த இரு தினங்களில் 59 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்துள்ளனர். அதில் ரத்தம் பரிசோதனை மேற்கொண்டபோது, ஒரு வயது குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு டெங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumari ,victim , Kumari, mysterious fever, murders 3, Palani, swine flu, one killed
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...