×

தமிழகம் முழுவதும் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் 6 சிறைத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்து  கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை புழல் சிறையில் கைதிகள் சிலர், சிறை விதிகளுக்கு புறம்பாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியானதையடுத்து சிறைக்குள் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டி.வி. செல்போன் போன்ற பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்தநிலையில் நேற்று தமிழக சிறைத்துறை அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: சென்னை புழல் சிறை சூப்பிரண்டாக இருந்த ருக்மணி பிரியதர்ஷினி புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் இளைஞர் சிறை சூப்பிரண்டாகவும், கோவை மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில்குமார், சென்னை புழல் சிறை சூப்பிரண்டாகவும், கோவை மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் சூப்பிரண்டாகவும், திருச்சி மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு முருகேசன் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் சூப்பிரண்டாகவும், சேலம் மத்திய சிறை சூப்பிரண்டாக இருந்த ஆண்டாள் வேலூர் சிறைக்கும், திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் கடலூர் சிறை சூப்பிரண்டாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prison officers, Tamil Nadu ,Niranjan Marti Action
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...