×

ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு, பயோமெட்ரிக் முறை கட்டாயம் கிடையாது: அமைச்சர் காமராஜ்

சென்னை: ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பயோமெட்ரிக் முறை கட்டாயம் கிடையாது என்ற போதும், குழப்பம் ஏற்படாத வகையில் எளிமையாகச் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்த அரிசி தரமானதா என்றும், பாமாயில் வைக்கப்பட்டுள்ள அட்டை பெட்டியில் கசிவுகள் ஏற்பட்டுள்ளதா என்றும் பரிசோதனையில் ஈடுபட்டார். அமைச்சருடன் உயர் அதிகாரிகளும் சென்று உணவுப் பொருட்களை பாதுகாத்து வரும் நடவடிக்கை பற்றி எடுத்து கூறினார்கள்.

மழைக்காலங்களில் குடோனில் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் காமராஜ் விளக்கி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1.97 கோடி ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பான எடுத்துக்காட்டாக செயல்படுகின்றது என்றும் கூறினார். சுமை தூக்கும் தொழிலாளர்கள் நலனுக்காக தானியங்கி சுமை தூக்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் காமராஜ், வெகு விரைவில் கூட்டுறவுத்துறை சார்பாக, வாகன எரிபொருள் நிலையங்கள் கூடுதலான அளவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ration Shop,Minister Kamaraj,Biometric,Smart Card
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...