×

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை : கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி படத்திற்கு, அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைங்களை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*கலைஞர் 19 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தவர்; போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் கலைஞர்.

*தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்

*கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர்

*கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Executive, Stalin, Mourning, Resolution
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...