×

தனஞ்ஜெயா சூழலில் சரண்டர் ஆனது தென்ஆப்பிரிக்கா..... 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

கொழும்பு: கொழும்பில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 97, டிக்வெல்லா 43 ரன்கள் குவித்தனர்.

பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக் மட்டும் 54 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென்ஆப்பிரிக்கா 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 121 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 9 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் முதல் மூன்று போட்டிகளை தென்ஆப்பிரிக்கா வென்றதால் 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhananjaya, South Africa, Sri Lanka, 5th ODI, Colombo
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...