×

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது : எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம் : மேட்டூரில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: முட்டை கொள்முதலில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. என்இசிசி நிர்ணயிக்கும் விலையில், ஓராண்டு சராசரியை கணக்கிட்டு அந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. தகுதியுள்ளவர்களுக்கு ஆய்வு செய்து தான் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதில் எந்தவித முறைகேடும் இல்லை. ஆந்திர அரசு, அவர்களின் மாநிலம் தொடர்பான பிரச்னைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. நாம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்குமாறு வலியுறுத்தி 22 நாட்கள் வரையிலும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தோம்.

அப்போது, யார் நமக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்? நம்முடைய பிரச்னையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. அவரவர் மாநிலங்களுக்கென்று வரும்போது பிரச்னையை கிளப்புகின்றனர். எனவே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்காது. பசுமை வழிச்சாலைக்கு 90 சதவீதம் நில அளவீடு பணிகள் நிறைவடைந்து விட்டன. விவசாயிகள் பலர் முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

35 வருடமாக ஒப்பந்த பணியில் ஈடுபடும் சம்பந்தி
ஒருவர் தொழில் செய்தால் அவரது வருமானம்,  வரி செலுத்துகிறாரா? என கண்காணிப்பது தான் வருமான வரித்துறையின் கடமை. வரி  ஏய்ப்பு செய்தால், சோதனை நடத்துவது இயல்பு. நாடு முழுவதும் தான் சோதனை  நடக்கிறது. எனது சம்பந்தி (சுப்பிரமணியன்) கடந்த 35 வருடங்களாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டு,  தமிழகம், கர்நாடகத்தில் பல்வேறு பணிகளை செய்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...