×

பட்டாசு உற்பத்திக்கு தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக்பூஷண் அமர்வு நேற்று தெரிவித்துள்ளது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு நாட்டிலேயே முதலாவதாக டெல்லியில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  இந்த நிலையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல் பட்டாசு உற்பத்திக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு பொதுநல வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதாக உத்தவிட்டது. இந்த நிலையில், இவற்றுக்கு எதிராக தமிழகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய மனுதாரர் தரப்பில் நீதிபதிகள் முன்பு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், “தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகைகளுக்காக பயன்படுத்தப்படும் பட்டாசுகளை அதன் உற்பத்தியாளர்கள் ஆண்டு தோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திலேயே தயாரிப்புகளை தொடங்கி விடுவார்கள் என்பதால் இந்தாண்டு பட்டாசு தயாரிப்பு தொடங்குவதற்கு முன்பே அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கோரும் மனுக்கள், நாளை விசாரிக்கப்படும்’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...