×

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுவதால் மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 3 செ.மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து...