×

பாதசாரிகளின் சாலையை கடக்க 7 புதிய நடை மேம்பாலங்கள் பொதுப்பணித்துறை ஒப்புதல்

புதுடெல்லி : தேசிய தலைநகரில் பாதசாரிகள் சாலைகளை எளிதாக கடக்க புதியதாக 7 நடை மேம்பாலங்களை கட்ட டெல்லி அரசின் பொதுப் பணித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த தலைநகர் சாலைகளில் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு செல்வது அவ்வளவு எளிதானது இல்லை.  விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இதற்கு தீர்வாக முக்கிய இடங்களில் எப்ஓபி எனப்படும் நடை மேம்பாலங்களை கட்ட முடிவானது. இதன்படி ஆர்டிஆர் மார்க், நெல்சன் மண்டேலா மார்க், சராய் காலி கானில் ஐஎஸ்பிடி, புறவட்ட சாலை-மகாத்மா காந்தி மார்க் ( ஷக்கூர்பூர் கிராமம்) தமிழ் சங்கம் மார்க், ஹர்சுவரூப் காலனி, மாயாபுரி ஆகிய 7 இடங்களில் நடைமேம்பாலங்கள் கட்டும் திட்டத்துக்கு டெல்லி பொதுப்பணித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.  

இட நெருக்கடி, படிகள் அமைக்க இடமின்மை  உள்ளிட்ட காரணங்களால்  சதர்பூர் மந்திர், தெற்கு டெல்லி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடை மேம்பாலம் கட்ட பொதுப்பணித்துறை அனுமதி தர மறுத்து விட்டது.  இந்த முடிவு சமீபத்தில் நடைபெற்ற பொதுப் பணித்துறையின் நடை மேம்பால குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு முதன்மை செயலர் மனோஜ் குமார் பரீதா தலைமை தாங்கினார்.  

இந்த கூட்டத்தில், புதிய நடை மேம்பாலங்களுக்கு அனுமதி தரப்பட்டதுடன், நடை மேம்பாலங்களுக்கான படிகள் அமைக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பகல் நேரத்தில் 1,894 பேர் சாலைைய கடக்கின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள 12 மணி நேரத்தில் 84,407 வாகனங்கள் சாலையை கடக்கின்றன.  குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சாலையை கடக்க அவதி படுகின்றனர். இதற்கு தீர்வாக நடை மேம்பாலங்கள் கட்ட முடிவானது’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்