×

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடந்த ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். அவர், வெற்றி  பெற்றதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி  கட்சியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு  தொடர்ந்தார்.இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, டிடிவி.தினகரன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றதாகவும், தேர்தல் வழக்கு தொடர்ந்த ரவி 246 வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும்  கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஊழல் நடவடிக்கையில்  ஈடுபட்டதாக தனக்கு எதிராக  கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும்  இல்லை. எனவே, ஆதாரமற்ற, பொய்யான  குற்றச்சாட்டுகளை கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்   என்று கூறியிருந்தார். இந்த மனு  நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி, இந்த தேர்தல் வழக்கில் முறைகேடுகள் தொடர்பான எந்த குற்றச்சாட்டுகளுக்கும் போதிய ஆதாரம் தரப்படவில்லை.   குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த ஆவணமும் மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை.எனவே, டிடிவி.தினகரன் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேர்தலை எதிர்த்து ரவி தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. டிடிவி.தினகரன் வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...