×

9 நாள் உள்ளிருப்பு போராட்டத்தால் கெஜ்ரிவால் உடல்நலம் பாதிப்பு ஆலோசனை கூட்டங்கள் ரத்து

புதுடெல்லி: முதல்வர் கெஜ்ரிவால் உடல்நலம் குன்றியதை அடுத்து நேற்று அனைத்து ஆலோசனை கூட்டங்களையும் ரத்து செய்தார்.  ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டிரைக்கை கைவிட கவர்னர் உத்தரவிடக்கோரி, கெஜ்ரிவால் கடந்த 9 நாட்களாக ராஜ்பவனில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கவர்னர் அறுவுரையை ஏற்று நேற்றுடன் தர்ணாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே உடலில் சர்க்கரை பிரச்னை உள்ளது. இதன் காரணமாகவே அவர் சரிவிகித உணவை உட்கொண்டு வந்தார். அதோடு, தினசரி இரண்டு வேளைகளில் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் கடந்த வாரம் முதல் 9 நாட்கள் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். இதனால் உரிய நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாதது, நேரம் தவறி சாப்பிட்டது உள்ளிட்ட காரணங்களால் அவரது உடலில் சர்க்கரையின் அளவு கூடியுள்ளது. இதனால் அவரது உடல் ஆரோக்கியம வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று வழகஙகமாக மேற்கொள்ளும் நடைபயிற்சியையும் தவிர்த்தார்.

 மேலும், நேற்று ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நடைபெறவிருந்த அனைத்து ஆலோசனை கூட்டங்களையும் ரத்து செய்தார். நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிய கெஜ்ரிவால், “ஆலோசனை கூட்டங்ளில் பங்கேற்கப்பதாக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி”என குறிப்பிட்டார். இதனிடையே, டெல்லி அரசு ஊழியர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கெஜ்ரிவாலுக்கு திறந்தமடல் எழுதியுள்ளனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...