×

வாலிபர்களை போல் மின்னல் வேகத்தில் சுழன்று திருடுகிறார் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிக்கும் முதியவர்

சென்னை: செயின் பறிப்பில் வாலிபர்களை மிஞ்சும் வகையிலான சம்பவம் வளசரவாக்கத்தில் நடந்துள்ளது. ெமாபட்டில் வந்த முதியவர் ஒருவர் மூதாட்டியிடம் 4 சவரன் செயினை பறித்து சென்ற சம்பவம் போலீசாரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ராமகிருஷ்ணா நகர் சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவரது மனைவி லட்சுமி (74). இவர், ேநற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது,மொபட்டில் வந்த முதியவர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து லட்சுமி கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்து கொண்டு மாயமானார். இதுகுறித்து லட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போது மூதாட்டி என்னிடம் 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தாலி செயினை  பறித்ததாக தெரிவித்தார். அதை கேட்ட போலீசார் வயதான காலத்தில் உங்களுக்கு கண்ணு சரியாக தெரியிலையா பாட்டி? என்று கூறி சிரித்தனர். வயதானவர் எப்படி செயின் பறித்து இருப்பார். வாலிபர்கள் தான் செயின் பறித்து இருப்பார்கள் என்று கூறி சிரித்தனர்.

ஆனால் மூதாட்டி லட்சுமி என்னிடம் செயின் பறித்தவர் வயதானவர் தான் என்று கூறினார். அதன்படி, போலீசார் சம்பவம் நடந்த  சிதம்பரனார் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, காட்சிகளை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மூதாட்டி சொன்னபடி முதியவர் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் சர்வசாதாரனமாக மூதாட்டியிடம் பேசி கொண்டு செயினை மின்னல் வேகத்தில் அறுத்து கொண்டு தனது மொபட்டில் தப்பிய காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட முதியவரின் புகைப்படம் மற்றும் அவர் பயன்படுத்திய மொபட் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதேபோல் மேற்கு கே.கே.நகர் அண்ணாச்சி நகரை  சேர்்ந்தவர்  பாஷம். இவர் ரயில்வேயில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி தர்மாம்பாள் (62). கடந்த 18ம் தேதி மதியம் 12.50 மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு ெசன்று விட்டு அண்ணாச்சி நகர் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட்டில் வந்த நபர் ஒருவர் தர்மாம்பாள் கழுத்தில் கிடந்த 8 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதில், தர்மாம்பாள் வழிப்பறி கொள்ளையனிடம் போராடிய போது 4 சவரன் கொண்ட பாதி செயின் அவர் கையில் இருந்தது. மீதியுள்ள 4 சவரன் செயின் கொள்ளையன் கைக்கு சென்றது.

இதுகுறித்து தர்மாம்பாள் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வயதான முதியவர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து என்னிடம் செயினை பறித்து சென்றதாக தெரிவித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளசரவாக்கத்தில் நேற்று முன்தினம் லட்சுமி என்ற மூதாட்டியிடம் செயின் பறித்த முதியவர் தான் தர்மாம்பாளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வாலிபருக்கு இணையாக சவால் விடும் வகையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...