×

குமரியில் நலிந்து வரும் வேப்பெண்ணெய் தொழில்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் முன்பெல்லாம் மரக்செக்குகளில் தேங்காய், எள், நிலக்கடலை, வேப்பவிதை, புன்னைவிதை உள்ளிட்ட பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடந்து வந்தது. நாளடைவில் இந்த தொழில் நலிவடைந்தது. அதன்பிறகு மரச்செக்கு எண்ணெய்களை மக்கள் அதிக அளவு விரும்புவதையடுத்து, குமரியில் பலர் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர்.
ஆனால் வேப்பெண்ணெய் உற்பத்திச்செய்யும் மரச்செக்குகள் பல மூடப்பட்டுள்ளன. தற்போது குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளத்தில் 2 இடங்களிலும், பருத்திவிளையில் ஒரு இடத்திலும் வேப்ெபண்ணெய் தயாரிக்கும் மரச்செக்கு உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் ₹300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வேப்பெண்ணெய் தயாரிக்கும் மரச்செக்கு உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் மரச்செக்குகள் கொண்டு எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பாக்கெட்களில் அடைக்கப்பட்ட எண்ணெய் விற்பனைக்கு வந்த பிறகு பின்பு மரச்செக்கு தொழில் நலிவடைந்தது. தற்போது வேப்பெண்ணெய் தயாரிக்கும் மரச்செக்குகள் 3 இடங்களில் மட்டுமே உள்ளன. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய் மரச்செக்குகள் மூலம் உற்பத்தி செய்யும் தொழில் குமரி மாவட்டத்தில் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது.

முன்பு, குமரி மாவட்டத்தில் போதிய அளவு வேப்ப விதைகள் கிடைத்தன. தற்போது அந்த அளவுக்கு  கிடைப்பது இல்லை. தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் உடன்குடி, இட்டமொழி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேப்பவிதைகள் வருகின்றன. தரமான விதைகள் கிலோ 40க்கும், தரம் சுமாரான விதைகள் 35க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. 100 கிலோ வேப்ப விதையில் 15 லிட்டர் வேப்பெண்ணெய் கிடைக்கும். இந்த வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் 300க்கு வைத்தியசாலைகளுக்கு வினியோகம் செய்கிறோம். வேப்பம்புண்ணாக்கு கிலோ 35க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.வேப்பெண்ணெய் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் வர்த்தக நிறுவனங்களில் ஒரு லிட்டர் வேப்பெண்ணெய் 500க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஏப்-27: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.