×

பூதாகரமாகும் ஸ்டெர்லைட் ஆலை : ரசாயன கசிவு என்ற பெயரில் நாடகமா?....பணியாளர்களை நுழைக்க திட்டம்?

தூத்துக்குடி: ரசாயன கசிவு எதிரொலியாக பாதுகாப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள நிலைமையை தங்களால் மட்டுமே கையாள முடியும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வழக்கமாக செய்யப்படும் கட்டாய பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள குறைவான பணியாளர்களுக்கு அனுமதி அளிப்பதோடு, குறைவான மின்சாரத்தையும் தமிழக அரசு விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ரசாயன கசிவுக்கு பிறகு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினாலும், 2 நாட்களுக்கு முன்பே மின் இணைப்பு கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் கடிதம் எழுதியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சீல் வைக்கப்பட்ட ஆலைக்குள் தங்கள் பணியாளர்களை நுழைக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.  

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்துவரும் கந்தக அமிலத்தை 2 நாட்கள் ஆன பின்னரும் அகற்றுவதில் சிக்கில் நீடித்து வந்தது. இதுவரை ஒரு சொட்டு அமிலம் கூட அகற்றப்படவில்லை என்று கூறப்பட்டது.  இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் அமிலத்தை ஏற்றிக் கொண்டு முதல் லாரி புறப்பட்டது. 21 டன் கந்தக அமிலத்தை எடுத்துக் கொண்டு லாரி கோவை சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...