×

புகை மாசு விவகாரம் ஆடி கார் நிறுவனத்தின் சிஇஓ அதிரடி கைது

பெர்லின் : வோல்க்ஸ்வோகன் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக புகையை வெளியிட்டதாக எழுந்த புகாரில் ஆடி நிறுவன சிஇஓ ரூபர்ட் ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டார்.ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோல்க்ஸ்வோகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றியதாக அமெரிக்காவில் நடந்த புகை மாசு சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, முன்னாள் சிஇஓ மார்டின் வின்டர்கோர்ன் உள்ளிட்ட 9 மானேஜர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவர் சிறையில் உள்ளநிலையில், வின்டர்கோர்ன் உள்ளிட்டோர் ஜெர்மனியில் உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்நிறுவனம் லட்சக்கணக்கான கார்களை திரும்ப பெற்றது. இந்நிலையில், புகை மாசு விவகாரத்தில் ஆடி நிறுவன சிஇஓ ரூபர்ட் ஸ்டாட்லரை ஜெர்மன் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஆடி நிறுவனத்தின் இன்ஜின் மேம்பாட்டுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஏற்கனவே விசாரணை காவலில் உள்ள நிலையில், அந்நிறுவனத்தை சேர்ந்த மேலும் 20 அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணை வளையத்துக்குள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...