×

வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறும் இளைய தலைமுறை 15 வயது சிறுவனை கொலை செய்த கொலையாளிகள் சிக்கியது எப்படி?

* விசாரணையின் போது நடித்து காட்டினர்
* தலைமறைவாக இருந்த மற்றொரு சிறுவனும் கைது

சென்னை: சுடுகாட்டில் 15 சிறுவனை கொலை செய்து புதைத்தது எப்படி என்பது குறித்து கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பரபரப்பு தகவல்கள்  அளித்துள்ளனர். சென்னை சூளைமேடு சித்ரா அப்பார்ட்மென்ட் அருகே நடைபாதையில் வசிப்பவர் பெருமாள். இவரது மகன் ராஜேஷ் (15). இவர், பெற்றோருடன்  இணைந்து அதே பகுதியில் நடைபாதையில் பழைய புத்தகங்களை விற்பனை செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி திடீரென ராஜேஷ்  மாயமானார். நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி முன்னிலையில் சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த  கதிர்வேல் மகன் பரத்குமார் (19) மற்றும் 2 சிறுவர்கள் தங்களின் வழக்கறிஞருடன் சரணடைந்தனர். அப்போது, பரத்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததான். அதில், ‘‘கடந்த ஜனவரி 14ம் தேதி நான், பள்ளம் தோண்டும் நண்பர்கள் 3  பேருடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது, ராஜேஷ் எங்களிடம் வந்து கத்தியை காட்டி மிரட்டி  பணம் கேட்டான். அப்போது, எங்களுடன் இருந்த செல்வத்தின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கழுத்தில் ராஜேஷ் கத்தியால் கீறினான். இதனால்  ஆத்திரமடைந்த நாங்கள் ராஜேசை கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர், கொலையை மறைப்பதற்காக அந்த சுடுகாட்டிலேயே பள்ளம்  தோண்டி ராஜேஷ் உடலை புதைத்து விட்டோம்.ஒரு கட்டத்தில் ராஜேஷ் பெற்றோரின் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்தோம். இதனால்  அவர்களுக்கு எங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

 இதுகுறித்து ராஜேஷ் பெற்றோர், எங்கள் மீது சந்தேகம் உள்ளது என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். அதன்படி, போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு  முன்பு எங்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, நாங்கள் இதுகுறித்து எந்த தகவலும் போலீசாரிடம் கூறவில்லை.  எங்க நான்கு நபர்களில்  ஒருவரின் தந்தை அரசு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இதனால் போலீசாருக்கு பயந்து எனது நண்பன் அவரது  தந்தையிடம் நடந்த விபரங்களை தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், கொலை வழக்கு என்பதால் எப்படியும் போலீசார் கைது  செய்துவிடுவார்கள். அதே நேரம் 4 பேரில் யாராவது ஒருவரை போலீசார் பிடித்துவிட்டால் அனைவருக்கும் சிக்கில் தான் ஏற்படும். எனவே, காவல்  நிலையத்தில் சரணடைவது தான் சரியானதாக இருக்கும் என்று கூறினர். அதன்படி நாங்கள் வழக்கறிஞர் உதவியுடன் காவல் நிலையத்தில்  சரணடைந்தோம். நாங்கள் தெரிந்து ராஜேஷை கொலை செய்யவில்லை. அவன் எங்களை கத்தியால் தாக்க வந்ததால் நாங்கள் அவனை கொலை  செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு சரணடைந்த பரத்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, கொலை நடந்த இடமான நுங்கம்பாக்கம் சுடுகாட்டிற்கு பரத்குமார் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் அழைத்து சென்று  விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்தது குறித்து அவர்கள் போலீசாரிடம் நடித்து காட்டினர். கொலையான சடலத்தை தோண்டி எடுத்து  பிரேத பரிசோதனை செய்வது குறித்து நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர். அனுமதி கிடைத்த உடன் ராஜேஷ் உடலை தாசில்தார் மற்றும் அரசு  மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த  சிறுவனை நேற்று சூளைமேட்டில் கைது செய்தனர்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...