×

இதுவரை 38 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: ஜூன் 28ல் தர வரிசை பட்டியல்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். மொத்தம், 38,271 விண்ணப்பங்களை மாணவர்கள்  பெற்று சென்றுள்ளனர்.தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த 11ம்  தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட்டு  வந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் காலை 9 மணி முதலே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிய தொடங்கினர்.  நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.

இதே போல், சென்னை மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரர் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவ,  மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று சென்றனர். நேற்று மாலை 5 மணியுடன் விண்ணப்பம் விநியோகம்  நிறுத்தப்பட்டது.அரசு  ஒதுக்கீடு இடங்களுக்கு 20,367 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீடு  இடங்களில் சேர 13,338 விண்ணப்பங்களும் சேர்த்து  மொத்தம் 38,271  விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்பாக்கம் மருத்துவ  கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நீண்ட வரிசையில் நின்று மாணவ, மாணவிகள் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி  நாளாகும். மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இதை தொடர்ந்து, வரும் 28ம் ேததி தர வரிசை பட்டியல் ெவளியிடப்பட உள்ளது.  ஜூலை 1 முதல் 5 வரை முதற்கட்ட கவுன்சலிங்கும், ஜூலை 16  முதல் 21ம் தேதி வரை 2ம் கட்ட கவுன்சலிங்கும் நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...