×

டெல்லி ஆளுநர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்த மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநர் இல்லத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த துணை முதல்வர் சிசோடியாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடக்கோரி, ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும்  அமைச்சர்கள் தொடர்ந்து 7-வது நாளாக தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்து  வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் வீட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் இருந்து பிரதமர் இல்லம் அருகே உள்ள மாண்டி ஹவுஸ் நோக்கி வந்தனர். ஆனால், பேரணிக்கு அனுமதி பெறாததால் அனைவரும் போலீசாரால் நாடாளுமன்ற தெரு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆம் ஆத்மி தொண்டர்கள் வருகையை தடுக்க 4 முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றவாறே கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...