×

குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு 30-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை; அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகத்தி்ன் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசி அவர் தலைநகர் சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார். குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு 30-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக...