×

முழு அடைப்பை ஒட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் குவிப்பு: சென்னையில் 32 பணிமனைகளுக்கு பாதுகாப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனால் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், ஏழும்பூர் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தலைமை செயலகம், டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும் சென்னை மாநகரில் உள்ள 32 பேருந்து பணிமனைகளிலும் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கமாக 1 அல்லது 2 போலீசார் மட்டுமே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், ஆனால் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். பேருந்து மீது கல்வீச்சு போன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக கடையை அடைக்க வற்புறுத்தினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்', என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில்...