×

கர்நாடக சட்டபேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக பரமேஷ்வரும்  நேற்று பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் பதவியேற்றனர். சட்டப்பேரவையில் மெஜாரிட்டி நிரூபிக்க அதிக நாட்கள் எடுத்து கொள்ளாமல் உடனடியாக செயல்படுத்த தீர்மானித்துள்ள முதல்வர் குமாரசாமி, நாளை மதியம் 12.15 மணி்க்கு பேரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் தனது அரசு மீது நம்பிக்கைகோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசுகிறார். அதை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மஜத-காங்கிரஸ் கூட்டணியில் 117 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறகணிக்க பாஜ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்தபின், சட்டபேரவையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று மாலை 3 மணி்க்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். மஜத-காங்கிரஸ் கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக இராமசாமியை வேட்பாளராக இன்று மஜத அறிவி–்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர்கள் இன்று மாலை வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான பாஜ சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவித்துள்ளதால் இருவரும் போட்டியின்றி நாளை தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: மே...