×

ஜம்மு-காஷ்மீரில் 9வது நாளாக தொடரும் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: வீடுகள், கார்கள் சேதம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. 9வது நாளாக நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு, சம்பா மற்றும் கத்துவா மாவட்டத்தில் உள்ள 100 எல்லையோர கிராமங்கள் மற்றும் 40  எல்லைப் பாதுகாப்பு படையின் சோதனைச் சாவடிகளை நோக்கி கடந்த 8 நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கத்துவா மாவட்டத்துக்குட்பட்ட ஹிராநகர் செக்டாரில் இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் படைகள் பீரங்கிகள் உள்ளிட்டவற்றால் கடும் தாக்குதல் நடத்தின. இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். கடந்த 18 மணி நேரத்தில் இது 4-வது தாக்குதல் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்றிரவு அர்னியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவர் 36 வயதுடைய ரவிக்குமார் என்பது கண்டறியப்பட்டது. மேலும் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கார்ஹ் பகுதியிலும், ஜம்முவில் உள்ள அர்னியா மற்றும் ஆர்எஸ் புரா பகுதியிலும் நேற்றிரவு முதல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அத்துமீறலால் ஆர்எஸ் புரா பகுதியில் வீடுகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்