×

முருகன் 3வது நாளாக மவுன விரதம் செல்போன் வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மீதான, செல்போன் பறிமுதல் வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 23ம் தேதி முதல் திடீரென மவுன விரதம் தொடங்கினார். 3வது நாளாக நேற்றும் மவுன விரதம் இருந்தார்.

இதற்கிடையில்முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் வாதிடாவிட்டால் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று முருகனிடம் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் தெரிவித்தார். அதன்படி, வேலூர் ஜேஎம்1 கோர்ட்டில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மீண்டும் வந்தது. இதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகனை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார். இதையடுத்து முருகனை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...