×

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கம் : இரோம் ஷர்மிளா வரவேற்பு

மணிப்பூர்: மேகாலயாவில் அருணாச்சலப்பிரதேசத்தை போல மணிப்பூர் மாநிலத்திலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை முழுமையாக நீக்க மத்திய அரசு கோரிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து 14 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய  இரோம் ஷர்மிளா மத்திய அரசு நடவடிக்கையை வரவேற்றுள்ளார். மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தை போல மணிப்பூர் மாநிலத்திலும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கை ஆகும்.

வடகிழக்கு பிராந்தியத்தில் 4 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்கள் 63% ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழக்கும் சம்பவங்கள் குறைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மணிப்பூர் மாநிலம் முழுவதுமாகவும் அருணாச்சலப்பிரதேசத்தில் சில இடங்களிலும் அமலில் இருந்த ஆயுத படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது.

Tags :
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...