×

விலங்குகள் வழித்தடம் 19 மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: யானை உட்பட விலங்குகள் வழித்தடம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகம் உட்பட 19 மாநிலங்கள் அடுத்த 4 வாரத்தில் மத்திய அரசின் வித்யா யத்ரியா திட்டம் குறித்து பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வனத்தை விட்டு இன்னொரு வனத்துக்கு விலங்குகள் கூட்டமானது இடம்பெயர்ந்துதான் தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இவ்வாறு ஒரு வனத்துக்கும் இன்னொரு வனத்துக்கும் செல்ல கூடிய பாதைதான் ‘விலங்குகள் காரிடர்’ என கூறப்படும் வலசைப்பாதையாகும். இதுபோன்ற பகுதிகளில் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வனங்கள் துண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிபதி மதன் பி லோகூர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆத்மாராம் நத்கர்னி வாதத்தில், “விலங்குகள் வழித்தடங்களை ஆகிரமித்துள்ளதற்கு எதிராக வித்யா யாத்ரியா என்ற பெயரில் மத்திய அரசு ஒரு கமிட்டியை உருவாக்கி அதுகுறித்து விளக்கம் தரவேண்டும் என மொத்தம் 22 மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அதில்  கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வேறு யாரும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை’’ என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “யானை உட்பட விலங்குகள் வழித்தடம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் திட்டம் தொடர்பாக தமிழகம் உட்பட மீதமுள்ள மொத்தம் 19 மாநிலங்கள் அடுத்த 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா...